search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகராட்சி ஊழியர்கள்"

    • தந்தையை மகன் அடித்து கொன்று வீடியோ வெளியாகி பரபரப்பானது.
    • டிஜிபி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

    சென்னை:

    சென்னையில் கொளுத்தி வரும் கோடை வெயிலில் குப்பை கிடங்குகளில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    சென்னை பெருநகரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய இரண்டு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    தினமும் 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து தரம் பிரிக்கப்படுகிறது. இந்த குப்பை கிடங்குகளில் மலை போல் குவிந்திருக்கும் குப்பைகள் சுட்டெரிக்கும் வெயிலால் தீப்பிடித்து எரிவதையோ, சிறு தீப்பொறி மூலம் விபத்து ஏற்படுவதையோ தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஜூன் மாதம் வரை குப்பை கிடங்குகளில் உள்ள குப்பைகளில் தண்ணீர் தெளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு பொறியாளர் பாலமுரளி தெரிவித்தார். 2018 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் இந்த இரண்டு கிடங்குகளிலும் பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

    பெருங்குடியில் 225.16 ஏக்கர் குப்பை கிடங்கை கமிஷனர் ராதாகிருஷ்ணன் சமீபத்தில் ஆய்வு செய்தார்.

    பெருங்குடி குப்பை கிடங்கில் 2021-ம் ஆண்டு சிறிய தீ விபத்து ஏற்பட்டது. அது உடனே கட்டுப்படுத்தப்பட்டது. தனியாரிடம் இருந்து 3 டேங்கர்கள் வாடகைக்கு எடுத்து குப்பை மீது தண்ணீர் தெளிக்கப்பட்டது. மேலும் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியும் 2 கிடங்கிலும் கட்டப்பட்டு தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி லாரிகள் மூலம் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. குப்பை குவியல்களுக்கு இடையே 3 மீட்டர் அகலமுள்ள வழித்தடங்களும் தீ பரவாமல் தடுக்க அமைக்கப்பட்டுள்ளது. வெயில் தாக்கத்தை பொறுத்து ஒரு நாளைக்கு 2 முறை அல்லது அதற்கு மேல் தண்ணீர் தெளிக்கப்படுகிறது என்று அதிகாரி தெரிவித்தார்.

    இது தவிர தீயணைப்பு வாகனங்கள் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பீடி, சிகரெட் துண்டுகளால் ஏற்படும் தீ விபத்தை தடுக்க மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதியில் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். குப்பை கிடங்கில் புகை ஏற்பட்டால் உடனடியாக அதனை அணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோடை காலம் முடியும் வரை குப்பை கிடங்குகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அதிகாரி கூறினார்.

    • கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
    • உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    காஞ்சிபுரம் பகுதியில் சாலைகளில் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாகவும் , அச்சுறுத்தும் வகையிலும் சுற்றி திரிந்த ஏராளமான கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அப்போது வட்டாட்சியர் புவனேஸ்வரன், கவுன்சிலர்கள் கார்த்திக், குமரன், சங்கர் உடன் இருந்தனர்.

    மதுரை மாநகராட்சி ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
    மதுரை

    மதுரை மாநகராட்யில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள், பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாளை (30-ந் தேதி) முதல் தொடர் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 

    7-வது ஊதிய குழு பரிந்துரையின்படி ஊதியம் வழங்க வேண்டும்.தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.கொரோனா கால ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.

    இதையொட்டி மதுரை தொழிலாளர் நலத்துறை மண்டல அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகி களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் தீர்வு எட்டப்படவில்லை. 

    அதன்பின்னர்  2-ம் கட்டமாக, மாநகராட்சி அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

    மேயர் இந்திராணி தலைமையில்  3-ஆம் கட்ட பேச்சுவார்த்தை மாநகராட்சி   அலுவலகத்தில்   நடந்தது. இதில் துணை மேயர் நாகராஜன் மாநகராட்சி அதிகாரிகள், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் அம்சராஜ், பூமிநாதன், பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி பணியா ளர்கள் நலன் தொடர்பான பேச்சுவார்த்தையை ஆணையர் தொடர்ந்து புறக்கணித்து வருவதற்கு, தொழிற்சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்தனர்.மேலும் இக்கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்டப்ப டவில்லை.

    இதுபற்றி  பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், தூய்மை பணியாளர்கள், பொறியியல் பிரிவு பணியாளர்களின் கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே நடத்தப்பட்ட 2 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. 3-ம் கட்ட மாக நடந்த பேச்சு வார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

    மாநகராட்சி நிர்வாக த்திடம் இருந்து நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்.அவ்வாறு இல்லையெனில் ஏற்கனவே அறிவித்தபடி நாளை (30-ம் தேதி) முதல் வேலை நிறுத்தத்தை தொடருவது உறுதி. இந்த வேலை நிறுத்தத்தில் தூய்மை பணியாளர்கள், பொறியியல் பிரிவு தொழிலாளிகள் சுமார் 6 ஆயிரம் பேர்  பங்கேற்க உள்ளனர்  என்றனர்.

    இந்த போராட்டம்  நடைபெற்றால் குப்பைகளை அகற்றுதல், கழிவு நீர் அடைப்பு சரி செய்தல், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பணிகளை செய்தல் வெகுவாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×